திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே ரோஸ்மியாபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு மகன் சிவராஜ், 36, இரண்டு மகள்கள். சிவன்ராஜ், பட்டதாரி; டிரைவர் உள்ளிட்ட பணிகளுக்கு சென்று வந்தார்.
இவர் சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் காண்பித்தார்.
ஆரம்பத்தில் அதில் பணம் வரவு வந்தது. பின், லட்சக்கணக்கில் இழந்தார்.
மகன் கேட்கிறாரே என எண்ணி, தந்தை பாஸ்கர் நிலங்களை விற்று 15 லட்சம் ரூபாய் கொடுத்தார். மேலும், 1 லட்ச ரூபாயை கொடுத்தார்.
அதையும் அந்த வாலிபர், ரம்மி விளையாட்டில் இழந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்டார்.
நேற்று முன்தினம் சகோதரியிடம் போனில் பேசிய சிவன்ராஜ், தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பணகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.