அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் புத்தாடைகள், சீருடைகள் வழங்கும் விழா நடந்தது.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தைத்திருநாளை முன்னிட்டு திருக்கோவில் பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள், சீருடைகள் வழங்கும் விழா நடந்தது.
ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கி, பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள், சீருடைகள் வழங்கினார்.
ஒன்றிய துணை சேர்மன் விஜயலட்சுமி முருகன் முன்னிலை வகித்தார்.
அறநிலைய துறை உதவி ஆணையாளர் ஜீவானந்தம் வரவேற்றார்.
இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், யசோதரைசந்திரகுப்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.