விருத்தாசலம் : ஜெயப்பிரியா குழுமத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை மகிழ்விக்கும் விதமாக, விருத்தாசலம் புறவழிச்சாலையில் உள்ள ஜெயப்பிரியா பள்ளியில் மகா சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.
நிறுவன தலைவர் ராஜகோபாலன், இயக்குனர் ஜெயசங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர். அனைத்து நிறுவனங்களின் அதிகாரிகள், இயக்குனர்கள், பொதுமேலாளர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
மேலும், ஊழியர்களின் குடும்பத்தினர் இடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்விகுழும இயக்குனர் தினேஷ் செய்திருந்தார்.