பண்ருட்டி : திருவதிகை பகுதியை சுற்றுலா மையமாக மாற்றுவது குறித்து நகராட்சி சேர்மன் ஆய்வு செய்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில், ரங்கநாதபெருமாள் கோவில், சரநாராயண பெருமாள் கோவில், திருவதிகை அணைக்கட்டு ஆகிய பகுதிகளை இணைத்து சுற்றுலாப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என, நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் கோரிக்கை விடுத்தார்.
அதன் பேரில் நாளை சுற்றுலாத் துறை அதிகாரிகள் திருவதிகை பகுதியை பார்வையிட வர உள்ளனர். இந்நிலையில் திருவதிகை அணைக்கட்டு பகுதியை நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். கமிஷ்னர் மகேஸ்வரி, உதவி பொறியாளர் மணி, துப்புரவு அலுவலர் குணசேகரன், கவுன்சிலர் கதிர்காமன், நகர அவை தலைவர் ராஜா, உதவி பேராசிரியர் ஆரோக்கியராஜ் உடனிருந்தனர்.