சிறுபாக்கம்: சிறுபாக்கம் அடுத்த மலையனுார் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மங்களூர் ஒன்றிய ஆத்மா குழு தலைவர் செங்குட்டுவன் தலைமை தாங்கி, பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கினார். ஊராட்சி தலைவர் தேவராஜ், கூட்டுறவு வங்கி செயலர் மகேஷ், தி.மு.க., நிர்வாகிகள் திருவள்ளுவன், குமணன், சேகர், சின்னதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.