விழுப்புரம் : கண்டமானடி ரயில்வே அணுகு சாலையில் ரூ.1.93 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் அடுத்த கண்டமானடி ரயில்வே அணுகு சாலையில் ரூ.1.93 கோடி மதிப்பீட்டில் இருவழிச்சாலை பணி நடைபெற்று வருகின்றது. இப்பணியை கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது;
நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து, மரகதபுரம்-கண்டமானடி ரயில் இருப்புப்பாதைக்கு செல்லும் அணுகு சாலையில், 5.5 மீட்டர் அகலத்தில் இடைவெளி சாலையாக இருந்ததனை தரம் உயர்த்தி, 7.5 மீட்டர் அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு இருவழிச்சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், சாலையில் நான்கு சிறுபாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு 1 கி.மீ., நீளத்திற்கு ரூ.1.93 கோடி மதிப்பீட்டில் 90 மில்லி மீட்டர் உயரத்திற்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.
இதை தொடர்ந்து, கண்டமானடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு கண் பரிசோதனை முகாம் மற்றும் ஜானகிபுரம் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அப்போது, கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சிவசேனா, உதவி கோட்டப் பொறியாளர் தனராஜன், உதவி பொறியாளர் வசந்த பிரியா, கோலியனுார் பி.டி.ஓ., ஜானகி, கண்டமானடி ஊராட்சி தலைவர் ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.