சபரிமலையில் கூடுதல் வசதிகள்: தேவசம் அமைச்சர் தகவல்

Added : ஜன 11, 2023 | |
Advertisement
மூணாறு:''சபரிமலையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்''என, கேரள தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.சபரிமலையில் மகரவிளக்கு காண வரும் பக்தர்களுக்கு இடுக்கிமாவட்ட முக்கிய மையப்பகுதியான சத்திரத்தில் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ராதாகிருஷ்ணன் செய்தார். பீர்மேடு எம்.எல்.ஏ. வாழூர் சோமன், வண்டி பெரியாறு ஊராட்சி
 சபரிமலையில் கூடுதல் வசதிகள்: தேவசம் அமைச்சர் தகவல்

மூணாறு:''சபரிமலையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்''என, கேரள தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சபரிமலையில் மகரவிளக்கு காண வரும் பக்தர்களுக்கு இடுக்கிமாவட்ட முக்கிய மையப்பகுதியான சத்திரத்தில் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ராதாகிருஷ்ணன் செய்தார். பீர்மேடு எம்.எல்.ஏ. வாழூர் சோமன், வண்டி பெரியாறு ஊராட்சி தலைவர் உஷா உட்பட பலர் உடனிருந்தனர்.

அமைச்சர் கூறியதாவது:

சத்திரம் பகுதியை மேம்படுத்தும் நடவடிக்கையில் தேவசம் போர்டு தலையிடும். கட்சி அரசியல், மதம், ஜாதி சிந்தனைக்கு அப்பாற்பட்டு சபரிமலை வளர்ச்சிக்கும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளையும் அரசும், தேவசம் போர்டும் செய்கிறது. கூடுதல் வசதிகள் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்.

இம்முறை சபரிமலையில் தேவையான வசதிகளை அனைத்து துறையினரும் நேர்த்தியாக செய்ததால் வெளி மாநில பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்பணிக்காக அரசு நிதி செலவிடப்படுகிறது.

தேவசம் போர்டின் நிதியை எடுப்பதாக சிலர் தவறாக புரிந்து கொள்கின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தேவசம் போர்டிற்கு அரசு ரூ.460 கோடி வழங்கியது, என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X