கள்ளக்குறிச்சி : தமிழ்நாடு கிராம மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், துாய்மை பணியாளர்கள் மற்றும் துாய்மை காவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டதிற்கு மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். இணை செயலாளர் அண்ணாமலை, துணை செயலாளர் பழனிசாமி, துணை தலைவர் ராஜேந்திரன், அமைப்பாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.
மாநில தலைவர் கிருஷ்ணசாமி, செயலாளர் கனி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஊரக வளர்ச்சி துறை சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சிவேல், செயலாளர் சந்திரசேகர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துாய்மை காவலர்களுக்கு விரிவடைந்த மருத்துவ காப்பீடு மற்றும் காலமுறை ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். நிலுவை ஊதியம் மற்றும் அகவிலலைப்படி 7வது கணக்கில் தொகை வழங்க வேண்டும்.
துாய்மை காவலர்களுக்கு 10ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு நல வாரிய அட்டை, பொங்கல் கருணை தொகை ரூ.1000 வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதில் டேங்க் ஆபரேட்டர்கள், துாய்மை பணியாளர்கள் பலர் பங்கேற்றனர். பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.