சென்னை:திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, இம்மாதம், 16ம் தேதியும், குடியரசு தினத்தை ஒட்டி, 26ம் தேதியும் மது கடைகளுக்கு விடுமுறை அறிவித்து, 'டாஸ்மாக்' உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக மதுபான வகை விற்பனை செய்கிறது. அவை, வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்படுகின்றன.
குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம் உட்பட ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டும், மதுக் கடைகளுக்கு விடுமுறை.
அதன்படி, வரும் 16ம் தேதி திருவள்ளுவர் தினமும், 26ம் தேதி குடியரசு தினமும் வருகிறது.
அந்த இரு நாட்களும் மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து, டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது.