சின்னசேலம் : சின்னசேலம் பெருமாள் கோவிலில் கூடாரவல்லி மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.சின்னசேலம் வரதராஜ பெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம் நடந்தது. அதனைத் தொடர்ந்து வரதராஜ பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் 17 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் செய்து, பட்டு வஸ்திரங்களால் அலங்கரித்து திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து சுவாமிகளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடத்தினர். வைபவத்தை சுந்தரம், ஜெயக்குமார் பட்டாச்சாரியார்கள் குழுவினர் செய்து வைத்தனர்.
அதேபோல் சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பகல் 12 மணி அளவில் ராமரை ரங்கநாதராகவும், சீதாவை ஆண்டாளாகவும் சித்தரித்து, சிறப்பு அலங்காரங்கள் செய்து, திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது.