கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம் நடந்தது.
கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நேற்று கூடாரவல்லி உற்சவம் நடந்தது.
பெருமாள், ஆண்டாள் உற்சவர்களுக்கு சிறப்பு அபிேஷகம் செய்த பின், சர்வ அலங்காரம் செய்து கோவில் உள்பிரகாரம் வலம் வந்து மண்டபத்தில் எழுந்தருள செய்தனர்.
ஆண்டாள் பக்தர்கள் திருவெம்பாவை, திருப்பாவை பாடினர்.
சிறப்பு பூஜைகளுக்கு பின் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
பூஜைகளை தேசிக பட்டர் செய்து வைத்தார். மேலும், ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் வரும் 17ம் தேதி போகி பண்டிகையன்று காலை 11 மணிக்கு நடக்கிறது.