சென்னை:காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும், அமைச்சர் துரைமுருகனுக்கு, அப்பல்லோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக நீர்வளத்துறை அமைச்சராகவும், தி.மு.க., பொதுச் செயலராகவும் இருப்பவர், துரைமுருகன், 84. காய்ச்சல் ஏற்பட்டதால், கட்சி மற்றும் அரசு அலுவல் சார்ந்த நிகழ்வுகளை, நேற்று முன்தினம் அவர் தவிர்த்தார்.
நேற்று முன்தினம் இரவு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, மருத்துவ குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில், அவர் வீடு திரும்புவார் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.