சென்னை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹூ பிறப்பித்த உத்தரவு:
மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய நிலையில், தமிழக வனத்துறையில் கட்டாய காத்திருப்பில் இருந்த, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சுதான்சு குப்தா, காடு வளர்ப்பு மற்றும் நிதி மேலாண்மை ஆணைய தலைமை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை வண்டலுார் உயிரியல் பூங்கா இயக்குனராக உள்ள ஸ்ரீநிவாஸ் ஆர்.ரெட்டி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலராக பதவி உயர்த்தப்பட்டு, தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
மத்திய அரசு பணியில், இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் துணை தலைமை இயக்குனராக உள்ள ராகேஷ்குமார் டோக்ரா இடமாறுதலின்றி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலராக பதவி உயர்த்தப்பட்டு உள்ளார்.
சென்னையில் வனத்துறை தகவல் தொழில்நுட்ப பிரிவு கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலராக உள்ள கிரிதர், இடமாறுதலின்றி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.