பிராட்வே, வியாசர்பாடியை சேர்ந்த 19 வயது பெண், பிராட்வே, என்.எஸ்.சி.போஸ் சாலையில் உள்ள ஜெய்னுல் அபுதின், 64, என்பவர் கவரிங் நகை கடையில் ஏழு ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.
ஜெய்னுல் அபுதின், அப்பெண்ணை விரும்புவதாகவும், ஆசைக்கு இணங்கினால் பணம் தருவதாகவும் கூறியுள்ளார். மேலும் கடையில் இருக்கும் போது, தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இதனால் மன உளைச்சல் அடைந்த அப்பெண், தற்கொலைக்கு முயன்றார்.
குடும்பத்தினர் மீட்டு விசாரித்தபோது நடந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
இது குறித்து, பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில் ஜெய்னுல் அபுதீன் சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது.
இதையடுத்து பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் அவரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.