சென்னை:தொடக்கக் கல்வி இணை இயக்குனர் உமாவுக்கு, இயக்குனராக பதவி உயர்வு வழங்கி, பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா உத்தரவிட்டு உள்ளார்.
பதவி உயர்வு பெற்ற இயக்குனர் உமா, ஒருங்கிணைந்த கல்வி திட்டமான 'சமக்ர சிக் ஷா'வின் கூடுதல் திட்ட இயக்குனர்- - 2 என்ற பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், நேற்று பொறுப்பேற்றார்.
பதவி உயர்வு பெற்றுள்ள உமா, பள்ளிக்கல்வியின் மெட்ரிக் பிரிவு, அரசு தேர்வுத் துறை என, பல பிரிவுகளில் பணியாற்றியவர்.
இயக்குனராக பதவி உயர்வு வழங்க, பல்வேறு விதிகள் பின்பற்றப்படுகின்றன. பதவி உயர்வு தாமதமாவதாக, சில அதிகாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சிலர் பதவி உயர்வுக்கான உத்தரவைப் பெற்று, அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.