சென்னை:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 53 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் 5,556 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னை, சேலத்தில் தலா இருவர்; காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, துாத்துக்குடி, திருப்பூரில் தலா ஒருவர் என, எட்டு பேருக்கு தொற்று உறுதியானது.
சிகிச்சை பெற்றவர்களில் நேற்று, 12 பேர் குணமடைந்தனர். மருத்துவமனைகளில், 25 பேர் உட்பட, 53 பேர் சிகிச்சையில் உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில், இதுவரை, 22 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில், 17 பேர் குணமடைந்த நிலையில், ஐந்து பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.