சென்னை:வினியோகஸ்தர்களின் வேண்டுகோளை ஏற்று, பொங்கல் வெளியீட்டு படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு படங்கள் வெளியாகின.
இப்படத்தின் சிறப்பு காட்சிகள், 11ம் தேதி அதிகாலையே துவங்கிய நிலையில் பொங்கலன்று சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி தரவில்லை.
இந்நிலையில் வெளியிட்ட அறிவிப்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திரைப்பட வினியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று, ஜன.,12, 13 மற்றும் 18ம் தேதிகளில் தியேட்டரில் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும், 14ம் தேதி முதல் 17 ம் தேதி வரையிலான பொங்கல் விடுமுறையில் ஏற்கனவே நான்கு காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு; இதில், கூடுதலாக ஒரு காட்சிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.