பொள்ளாச்சி:கேரளாவில் இருந்து மருத்துவ மற்றும் இறைச்சிக் கழிவுகளை ஏற்றி வந்து தமிழக எல்லைப்பகுதிகளில் கொட்டுவது வாடிக்கையாகி விட்டது.
நேற்று முன்தினம் இரவு பொள்ளாச்சி மீனாட்சிபுரம் அருகே இரு லாரிகளை சிறைபிடித்த மக்கள் ஆனைமலை போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் லாரிகளை சோதனையிட்ட போது குப்பைக் கழிவுக்குள் மருத்துவக்கழிவு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார் டிரைவர்கள் மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.