தென்காசி:தென்காசி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியலை கலெக்டர் ஆகாஷ் வெளிப்படையாக அறிவித்தார். இதன் மூலம் தி.மு.க., மாவட்டச் செயலர் அலப்பறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர், ரேஷன் கடை விற்பனையாளர் பணிகளுக்கான ஆள்தேர்வு மாவட்ட வாரியாக நடந்து வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் 53 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஒவ்வொரு தாலுகா அளவிலும் தேர்வு பெற்றவர்களின் பட்டியலை நேற்று தென்காசி கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டார்.
இந்நிலையில், தென்காசியில் சில தினங்களுக்கு முன் நடந்த தி.மு.க., உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலர் சிவபத்மநாதன், அந்த பணிகள், தி.மு.க., நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கலெக்டர் வெளியிட்ட பட்டியல் நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் இருந்தது.