எலச்சிபாளையம்:''வரும், 2047ல், 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, அனைத்தும், அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் நாடாக, முன்னேறிய நாடாக நம் நாடு இருக்க நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் பேசினார்.
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அடுத்த கோவில்பாளையத்தில், பா.ஜ., சார்பில் நடந்த, 'நம்ம ஊரு மோடி பொங்கல்' நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியதாவது:
ஆண்டு தோறும் நம்ம ஊரு மோடி பொங்கலை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். தமிழ் கலாசாரத்தை, பண்பாட்டை, தமிழர் பெருமையை போற்றும் அருமையான பொங்கல் விழா அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளது.
வரும், 2047ல், 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, அனைத்தும், அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் நாடாக, முன்னேறிய நாடாக நம் நாடு இருக்க நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், பா.ஜ., நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலர் ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட பார்வையாளர் சிவகாமி பரமசிவம், ஒன்றிய தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.