ராமதாஸ் பெயரில் கூட வடமொழி வாசனை தானே வீசுகிறது!

Added : ஜன 12, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: ஒரு செடி நட்டால், அவர்களுக்கு நான் வாழ்த்து சொல்வேன். நான் அனுப்பிய வாழ்த்துக்கு சிலர், 'ஓகே' என்று சொல்லும் போது, எனக்கு அர்த்தம் புரிவதில்லை. சிலர், 'தேங்க் யூ ஐயா' என கூறுகின்றனர். 'நன்றி' என, தமிழில் சொல்ல யாருக்கும் தெரியவில்லை.டவுட் தனபாலு: மருத்துவரின் வருத்தம் நியாயமானது என்பதில் டவுட்டே... மன்னிக்கணும், சந்தேகமே இல்லை... அதே நேரம்,
Ramadoss, Pattali Makkal Katchi, Tamil, Congress, Rahul, Vanathi, BJP

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: ஒரு செடி நட்டால், அவர்களுக்கு நான் வாழ்த்து சொல்வேன். நான் அனுப்பிய வாழ்த்துக்கு சிலர், 'ஓகே' என்று சொல்லும் போது, எனக்கு அர்த்தம் புரிவதில்லை. சிலர், 'தேங்க் யூ ஐயா' என கூறுகின்றனர். 'நன்றி' என, தமிழில் சொல்ல யாருக்கும் தெரியவில்லை.

டவுட் தனபாலு: மருத்துவரின் வருத்தம் நியாயமானது என்பதில் டவுட்டே... மன்னிக்கணும், சந்தேகமே இல்லை... அதே நேரம், இவரது பெயரில் கூட ராமதாஸ் என்ற வடமொழி வாசனை தானே வீசுகிறது... அதை, துாய தமிழில், 'ராமன் அடிமை' என மாற்றி, தமிழ் பேசும் நல்லுள்ளங்களுக்கு முன்னுதாரணமாக இருந்தால் என்ன?


***

காங்., - எம்.பி., ராகுல்: நான், 'டி - ஷர்ட்' அணிவது குறித்து, பலரும் கேள்வி எழுப்புகின்றனர். மத்திய பிரதேசத்தில், மூன்று ஏழைப் பெண்களை சந்தித்தேன். சரியான உடை அணியாததால், அவர்கள் குளிரில் நடுங்கினர். அப்போது தான், எனக்கு நடுக்கம் ஏற்படாத வரை, தொடர்ந்து டி - ஷர்ட் மட்டும் அணிவது என முடிவெடுத்தேன்.


latest tamil news

டவுட் தனபாலு: எங்க ஊர் மதுரைக்கு, 1921ல் வந்த மகாத்மா காந்தி, ஏழை மக்கள் உடுக்க உடையின்றி திரிவதை பார்த்து, 'இனி வாழ்நாள் முழுதும் அரையாடையே உடுத்துவேன்' என, சபதம் எடுத்ததா வரலாறு சொல்லுது... அதே மாதிரி, குளிரில் வாடிய பெண்களுக்கு தன், 'டி - ஷர்ட்'களை வாரி கொடுத்திருந்தா, 'டவுட்'டே இல்லாம ராகுலை பாராட்டி இருக்கலாம்!***


பா.ஜ., மகளிர் அணி தேசிய தலைவர் வானதி: தமிழக கவர்னர் என, ஊடகங்கள் அழைக்கின்றன. மாநில அரசு விளம்பரத்தில், 'தலை நிமிர்கிறது தமிழகம்' என்று கூறுகிறது. தமிழகம் என்ன சட்டவிரோத வார்த்தையா; இந்திய ஒருமைப்பாட்டுக்கு விரோதமான வார்த்தையா?


டவுட் தனபாலு: இவங்க மட்டும் ஒன்றிய அரசு, ஒன்றிய அமைச்சர்னு பக்கம் பக்கமா பேசுவாங்க, எழுதுவாங்க... அதை எல்லாம் கேள்வி கேட்காம சகித்துக் கொள்ளணும்... தமிழகம் என யாராவது சொன்னால் மட்டும், வீறு கொண்டு எழுவது எந்த ஊர் நியாயம் என்ற, 'டவுட்' எழுகிறதே!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (2)

Indian -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜன-202312:12:36 IST Report Abuse
Indian Luckily Mr. Rahul did not see nude person. People escaped.
Rate this:
Cancel
Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா
12-ஜன-202310:29:55 IST Report Abuse
Yes your honor தமிழக கவர்னர் அவர்கள் சாதாரணமாக 'தமிழகம்' என்று கூறியதை திமுகவினர் அதீத காழ்புணர்ச்சியால் அவ்வார்த்தையை ஒரு சீண்டலாக எடுத்துக் கொண்டுள்ளனர். இது திமுகவினரின் 'வேண்டாத மருமகள் கால் பட்ட' மனோபாவத்தைக் காட்டுகிறது. பா ஜா க வேகமாக வளர்ந்து வருவது தி மு க வினருக்கு தூக்கத்தைக் கெடுத்து வருவதால் 'எதைத் தின்றால் பித்தம் தெளியும்' என புரியாமல் வெறிபிடித்துப் போய் உள்ளார்கள் என்பதையே திமுகவினரின் சமீபகால நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. உதயநிதி அவர்கள் மந்திரியாக பதவி ஏற்றபோது மக்களின் மனநிலை அதற்கு எதிராக வெளிப்பட்டவுடன் அந்த சூழ்நிலையை கட்டுப்படுத்த, திசை திருப்புவதற்காக அண்ணாமலை அவர்களின் வாட்ச்சு என்று தேவையே இல்லாத ஒன்றை ஊதி பெரிதாக்கினார்கள். அதுவும் பூமராங் போல இவர்களுக்கே ஆப்படித்து விட்டது. இன்னும் வரும் காலங்களில் திமுகவினரின் அடாவடிகள் அதிகரிக்குமே ஒழிய குறையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X