அடுத்த 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும்

Added : ஜன 12, 2023 | |
Advertisement
பெங்களூரு-'கர்நாடகாவில் மேலும் இரண்டு நாட்களுக்கு 5 - 6 டிகிரி செல்ஷியஸ் வரை குளிர் குறையும்' என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:கர்நாடகாவில் அடுத்த 24 மணி நேரத்தில், மாநிலத்தின் தெற்கு, வடக்கு உள் மாவட்டங்களின் சில பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 5 - 6 டிகிரி செல்ஷியஸ் குறைவாக இருக்கும். வட மாவட்டத்தின் சில



பெங்களூரு-'கர்நாடகாவில் மேலும் இரண்டு நாட்களுக்கு 5 - 6 டிகிரி செல்ஷியஸ் வரை குளிர் குறையும்' என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கர்நாடகாவில் அடுத்த 24 மணி நேரத்தில், மாநிலத்தின் தெற்கு, வடக்கு உள் மாவட்டங்களின் சில பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 5 - 6 டிகிரி செல்ஷியஸ் குறைவாக இருக்கும். வட மாவட்டத்தின் சில பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசும். கடலோர பகுதிகளில் வறண்ட காற்று வீசும்.

பெங்களூரில் அதிகாலையில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 27 டிகிரி செல்ஷியஸ்; குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும்.

பாகல்கோட்டில் 5.7, விஜயபுராவில் 7, பீதரில் 7.5, ராய்ச்சூரில் 11.6, மடிகேரி 10.3, பெலகாவியில் 10.4, பெங்களூரில் 12.6, கலபுரகியில் 13.5, ஹம்பியில் 12.5, மங்களூரில் 20.2 டிகிரி செல்ஷியஸ் பதிவாகியுள்ளன.

கடந்தாண்டு இதே நாளில் குறைந்தபட்ச வெப்ப நிலையாக, பெலகாவியில் 11.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது.

குளிர்காலம் பொதுவாக நவம்பர் கடைசி வாரம் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கி, பிப்ரவரி வரை நீடிக்கும். ஆனால், இம்முறை மாநிலத்தில் குளிர் வழக்கத்தை விட தாதமாக தொடங்கியுள்ளது.

தற்போது வட மாநிலங்களில் இருந்து தென் மாநிலங்களை நோக்கி குளிர் காற்று வீச தொடங்கியுள்ளதால், குளிர் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X