பெங்களூரு-''சான்டரோ ரவியை மைசூரு போலீசார் தேடி வருகின்றனர். மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்துள்ளார். அவர் எங்கிருந்தாலும் கைது செய்யப்படுவார்,'' என உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
'சான்டரோ' ரவியை மைசூரு போலீசார் தேடி வருகின்றனர். மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்துள்ளார். எனவே, கண்டுபிடிப்பது கடினம். ஆனாலும், அவர் எங்கிருந்தாலும் கைது செய்யப்படுவார்.
எந்தவொரு குற்றச்சாட்டையும் கூற, காங்கிரஸ் துணிவதில்லை. காங்கிரஸ் காலத்தில் தான், ரவி வளர்ந்துள்ளார். அவரை நாங்கள் விடமாட்டோம்.
எஸ்.ஐ., தேர்வு மோசடியில், ரவிக்கு தொடர்பு இருக்கிறதா என்பது விசாரிக்கப்படும்.
பத்திரிகையாளர்கள் உட்பட யார் வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். என் வீட்டுக்கு வரும்போது போலீசிடம் சான்றிதழ் வாங்கி வர சொல்ல முடியாது.
பலர் வந்தவுடன் புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.
கர்நாடகாவில் எப்.எஸ்.எல்., என்ற தடய அறிவியல் ஆய்வகம் அமைப்பது தொடர்பாக, குஜராத்தில் ஒப்பந்தம் செய்ய செல்கிறேன்.
அம்மாநில முதல்வர், உள்துறை அமைச்சருடன் சந்திப்பு நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.