தங்கவயல்--தங்கவயல் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா, திருவள்ளுவர் தின விழா வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.
தமிழ்ச் சங்கத் தலைவர் கலையரசன் கூறியதாவது:
தங்கவயல் தமிழ் சங்கத்தில் பொங்கல் விழா மற்றும் திருவள்ளுவர் தின விழா வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல், திருவள்ளுவர் கொடி மற்றும் முத்தமிழ் மன்னர்களான சேர, சோழ, பாண்டியரின் புலி, வில் அம்பு, மீன் சின்னம் பொறித்த மூவேந்தர் தமிழ்க்கொடி ஆகியவை ஏற்றி வைக்கப்படுகிறது.
திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க கோரி இவ்வாண்டு தங்கவயலில் 10 ஆயிரம் தமிழர்களின் கையெழுத்து பெறும் நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது.
திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசளிக்கப்படுகிறது.
தமிழுக்கு சேவை செய்வோர், தமிழார்வலர்கள் ஆகியோருக்கு ஆண்டுதோறும் தமிழ் மாமணி விருதுகள் வழங்குவது போல், இவ்வாண்டும் வழங்கப்படுகிறது.
இலக்கியவாதிகள், பேராசிரியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழர்களான மக்கள் பிரதிநிதிகள் பலரும் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.