பெங்களூரு-பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலைய 2வது முனையத்தில், பொங்கல் முதல் விமான சேவை துவங்கவுள்ளது.
பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2வது முனையம், 5,000 கோடி ரூபாய் செலவில், 63 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இம்முனையத்தை, பிரதமர் நரேந்திர மோடி, 2022 நவம்பர் 11ம் தேதி திறந்து வைத்தார். ஆனால், சில பணிகள் முடிக்கப்படாமல் இருந்ததால், விமான சேவை துவங்காமல், ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பி.ஐ.ஏ.எல்., என்ற பெங்களூரு சர்வதேச விமான நிறுவனம், 'வரும் 15ம் தேதி பொங்கல் நாளன்று, காலை 8:40 மணிக்கு பெங்களூரில் இருந்து கலபுரகிக்கு, 'ஸ்டார் ஏர்' நிறுவனத்தின் விமானம் இயக்கப்படுகிறது.
'தொடர்ந்து, ஏர் ஏசியா, ஏர் இந்தியா, விஸ்தாரா உட்பட பிற நிறுவனங்களின் விமானங்கள் விரைவில் இயங்க தொடங்கும்' என குறிப்பிட்டுஉள்ளது.