ஹாசன்-ஹாசன் மாவட்டம், பேலுார் அருகே உள்ள நெட்டிகரையைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 22. இவர் கடந்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி உடல்நல குறைவால் உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது தம்பி திலீப், 21 கடந்த 4ம் தேதி இருசக்கர வாகனத்தில் பேலுாருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ரயபுரா என்ற இடத்தில் வளைவில் திரும்பும்போது, சாலையோரம் இருந்த வயலில் பைக் கவிழ்ந்ததில் படுகாயம் அடைந்தார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஹாசன் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக பெங்களுரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
அங்கு சிகிச்சை பலன்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். கடந்த ஆண்டு அண்ணன் உயிரிழந்த அதே தேதியில் தம்பியும் உயிரிழந்ததால், குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.
Advertisement