ரூ.125 கோடி தங்கம், போதைப்பொருள்: 2022ல் பறிமுதல்

Added : ஜன 12, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: கடந்த ஆண்டில், 206 கிலோ தங்கம், 14 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கடந்த 2022 ஜனவரி முதல் டிசம்பர் வரை, 94.22 கோடி ரூபாய் மதிப்பிலான, 205.84 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட 97 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாய், சார்ஜா உள்ளிட்ட வளைகுடா நகரங்களில் இருந்து, அதிகளவில் தங்கம் கடத்தி
Gold, Drugs, Seizure, தங்கம், போதைப்பொருள், பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: கடந்த ஆண்டில், 206 கிலோ தங்கம், 14 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2022 ஜனவரி முதல் டிசம்பர் வரை, 94.22 கோடி ரூபாய் மதிப்பிலான, 205.84 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட 97 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாய், சார்ஜா உள்ளிட்ட வளைகுடா நகரங்களில் இருந்து, அதிகளவில் தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது.

இங்கிருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற, 10.97 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக, 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த, 14 கோடி ரூபாய் மதிப்பிலான, 27.66 கிலோ 'ஹெராயின், மெத்தகுலோன், கொகைன்' ஆகிய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


latest tamil news


வெளிநாட்டில் இருந்து, 'டாமரின்' குரங்குகள், மலைப்பாம்பு குட்டிகள், நரிக்குட்டிகள், 'கஸ்கஸ்' எனும் குள்ள விலங்குகள் உட்பட, 134 அரிய வகை வன விலங்குகள், 2022ல் சென்னைக்கு கடத்தி வரப்பட்டுள்ளன. இது தொடர்பாக, 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


latest tamil news


கடந்த ஆண்டில், 1.26 கோடி ரூபாய் மதிப்பிலான வைர கற்கள் மற்றும் நவரத்தினங்கள் கடத்தப்பட்டுள்ளன. மேலும், 3.90 கோடி ரூபாய் மதிப்பிலான சிகரெட்டுகள், மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2022ல் மட்டும், 124.88 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம், போதைப்பொருட்கள் சிக்கியுள்ளன; 407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 122 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என, சென்னை விமான நிலைய கமிஷனர் மேத்யூ ஜோளி தெரிவித்துள்ளார்.

2021ல் எவ்வளவு?

கடந்த 2021ல், 262 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பிடிபட்டன. இதில், 70.12 கோடி ரூபாய் மதிப்பிலான, 157 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 234 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதேபோல, 181 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் அதிகபட்சமாக, 170 கோடி மதிப்பில், 25.44 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.கடந்த 2021ல் அதிக அளவு விமானங்கள் இயக்கப்படாத நிலையில், 262 கோடி ரூபாய் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன. ஆனால், 2022ல் அதிகளவு விமானங்கள் இயக்கப்பட்டும், 125 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மட்டுமே கடத்தப்பட்டுள்ளன.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (5)

ram - mayiladuthurai,இந்தியா
12-ஜன-202310:54:02 IST Report Abuse
ram இதுவே காங்கிரஸ் மத்தியில் இருந்தால், இந்த திருச்சபை முன்னேற்ற கழக ஆட்சியினை களைத்து விட்டு இருப்பர்கள், இந்த ஒரு காரணமே போதும். பிஜேபி பாவம், புண்ணியம், என்று பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
12-ஜன-202310:03:48 IST Report Abuse
K.n. Dhasarathan ரூபாய் 181 கோடி மதிப்பு போதை பொருள்கள் கடத்தி வரப்பட்டுள்ளன, அதில் 95% சதவீதம் பொருள் எந்த துறைமுகத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன? அதானி துறைமுகத்தில் இருந்து செய்திகளை தெளிவாக குறிப்பிடுங்கள், பத்திரிக்கை தர்மம் என்பது முழு செய்திகளையும் சொல்வது, பாதி சொல்லி பாதி மறைப்பது அல்ல, காசுக்காகவே வேலை செய்யும் சில பத்திரிகைகளும் உள்ளன
Rate this:
ram - mayiladuthurai,இந்தியா
12-ஜன-202312:05:30 IST Report Abuse
ramஇந்த திருச்சபை முன்னேற்ற அரசாங்கம் அதானி குழுமத்திற்கு ஐம்பத்தேழு கோடி திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது அது தெரியுமா உங்களுக்கு....
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
12-ஜன-202308:54:39 IST Report Abuse
raja விடியல் திரவிடியா மாடல் அரசு வந்ததில் இருந்து தமிழகம் கடத்தல் காரர்களின் சொர்க பூமியாக திகழ்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது......
Rate this:
சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா
12-ஜன-202311:43:58 IST Report Abuse
சிவ.இளங்கோவன் .கடத்தலை தடுத்தால்தாண்டா இந்தனை கிலோ தங்கம் போதை பொருள் கிடைத்துள்ளது .. இல்லையென்றால் கமிஷன் வாங்கி கொண்டு இவற்றை அனுமதித்து இருப்பார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X