மாண்டியா-''எனக்கு எந்த கட்சிகளில் இருந்தும், அதிகாரப்பூர்வ அழைப்பு வரவில்லை. இதைப் பற்றி யாரும் என்னுடன் பேச்சு நடத்தவில்லை,'' என மாண்டியா சுயேச்சை எம்.பி., சுமலதா அம்பரிஷ் தெரிவித்தார்.
மாண்டியாவில் நேற்று அவர் கூறியதாவது:
எனக்கு எந்த கட்சிகளில் இருந்தும், அதிகாரப்பூர்வமாக அழைப்பு வரவில்லை. என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. ஒருவேளை எனக்கு அழைப்பு வந்தால், அதைப் பற்றி யோசிப்பேன். பா.ஜ., மற்றும் காங்கிரஸ் என, இரண்டு கட்சிகளிலும் எனக்கு நண்பர்கள் உள்ளனர்.
லோக்சபா தேர்தலின் போது, எனக்கு காங்கிரசில் சேர ஆர்வம் இருந்தது. பெங்களூரு வடக்கு அல்லது தெற்கில் போட்டியிடுங்கள் என்றனர்.
வரும் சட்டசபை தேர்தல் குறித்து, இப்போதே எதையும்கூற முடியாது. இது அரசியல். அம்பரிஷ் மட்டும் அரசியலில் இருப்பார் என, நினைத்திருந்தேன். ஆனால் கட்டாயத்தின் பேரில், நான் அரசியலுக்கு வர வேண்டியிருந்தது. சூழ்நிலைக்கு தகுந்தபடி முடிவு செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.