உடுப்பி-''குழந்தைகள் முன்னிலையில் விலங்குகளை வெட்டாதீர்கள்,'' என உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் தெரிவித்தார்.
உடுப்பியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இறைச்சி கடைகளில் மட்டுமின்றி, வீடுகளிலும் குழந்தைகள் முன் விலங்குகளை வெட்டக்கூடாது. ரத்தம் கசியும் நிலையில் சாலை ஓரத்தில் விலங்குகளை தொங்கவிடுவது சரியல்ல.
இறைச்சி கடைகளில் வெட்டப்படும் விலங்குகளை கண்டால், குழந்தைகளின் மனம் சிதைந்து விடும். கொடுமை, இறைச்சி, காயம், அடித்தல் ஆகியவை குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள் சாத்வீக உணவுகளை உண்ண வேண்டும். இறைச்சி சாப்பிடக்கூடாது என்று சொல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.