சாம்ராஜ் நர்-மக்களை அச்சுறுத்திய காட்டு யானை பிடிபட்டதால், கிராமத்தினர் நிம்மதி அடைந்தனர்.
சாம்ராஜ் நகர், குண்டுலுபேட்டின், பண்டிப்பூர் புலிகள் சரணாலய பகுதியில், கடேகோட்டே கிராமத்தின் சுற்றுப் பகுதிகளில், சில நாட்களாக காட்டு யானை நடமாடி, மக்களை அச்சுறுத்தியது. விவசாயிகளின் நிலத்தில் புகுந்து, பயிர்களை மிதித்து பாழாக்கியது.
யானையை பிடிக்கும்படி விவசாயிகள் வலியுறுத்தினர். வனத் துறையினர் அதன் நடமாட்டத்தை ஆய்வு செய்து, பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.
காட்டு யானைகளை பிடிப்பதில் நிபுணரான அபிமன்யூ, மகேந்திரா, கணேஷா, பீமா யானைகளின் உதவியால், கால்நடை டாக்டர்கள், மயக்க ஊசி போட்டு நேற்று காட்டு யானையை பிடித்தனர்.
ராம்புரா வளர்ப்பு யானைகள் முகாமுக்கு இடம் மாற்றப்பட்டது.
'அபிமன்யுவும், மற்ற யானைகளும், காட்டு யானை தப்பி ஓடாமல் பார்த்துக் கொண்டதால், விரைவில் பிடிக்க முடிந்தது' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
தங்களுக்கு தொல்லை கொடுத்த யானை பிடிபட்டதால், கிராமத்தினரும் நிம்மதி அடைந்தனர்.