சாத்துார்--சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று 11 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டது.
அறநிலையத்துறை உதவி ஆணையர் வளர்மதி, கோயில் உதவி ஆணையர் கருணாகரன், கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, அறங்காவலர்கள் முன்னிலையில் நிரந்தர உண்டியல் 10 கோசாலை உண்டியல் 1 மொத்தம் 11 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டது. ரொக்கம் ரூ 30,95,343, தங்கம் 90 கிராம், வெள்ளி 395 கிராம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
கோயில் ஊழியர்கள், அலுவலர்கள், தன்னார்வலர்கள் காணிக்கை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.