கோவை : டாக்டர் என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், 22-வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி, டாக்டர் என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் தவமணிதேவி ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி பேசுகையில், ''மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வியின் மூலம் வாழ்வில் முன்னேற வேண்டும்,'' என்றார்.
கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் அருண், முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன், என்.ஜி.பி., கல்விக் குழுமங்களின் இயக்குனர் முத்துசாமி, டாக்டர் என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில், இளங்கலையில் ஆயிரத்து 995 மாணவர்கள், முதுகலையில் 336 மாணவர்கள், ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டத்தில் 10 மாணவர்கள் என, 2 ஆயிரத்து 341 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்.
விளம்பர விருப்ப செய்தி