கோவை : கோவை கோட்ட அளவிலான, தபால் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வரும், 27ம் தேதி நடக்கிறது.
குட்ஷெட் ரோடு, தலைமை தபால் நிலையத்தில், முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு கூட்டம் நடைபெறும்.
தபால் ஓய்வூதியர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், கூட்டத்தில் நிவர்த்தி செய்யலாம்.
நேரில் வர முடியாதவர்கள், 'முதுநிலை தபால் கண்காணிப்பாளர் அலுவலகம், கோவை கோட்டம், கோவை -641001' என்ற முகவரிக்கு கடிதம் வாயிலாக, வரும் 20ம் தேதிக்கு முன், புகார்களை அனுப்பலாம்.