திருப்பூர் : ஊத்துக்குளி, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 32வது விளையாட்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இந்திய பேட்மின்டன் அணி பயிற்சியாளர் மோகன்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். சபரி இன்டேன் நிறுவனர் சாவித்திரி ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார்.
முன்னதாக பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். பள்ளித்தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். பள்ளியின் துணைத்தலைவர் கருப்புசாமி, தாளாளர் பாலசுப்ரமணியம், செயலாளர் செந்தில்நாதன், பெரியசாமி ஆகியோர் பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பொருளாளர் சந்திரசேகர், பள்ளி உறுப்பினர் துரைராஜ் பரிசு வழங்கினர். தமிழ் ஆசிரியர் ராஜ்குமார் நன்றி கூறினார்.