537 கிலோ போதை பாக்கு பறிமுதல்
தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே சேத்துார் பகுதியில் போலீசார் ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டதில் 2 மூடை போதை பாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது. டிரைவர் அருணிடம் நடத்திய விசாரணையில், ஆதிபுத்திரன் கொண்ட அய்யனார் கோயில் செல்லும் வழியில் தனியார் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 537 கிலோ போதை பாக்குகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கிடங்கு உரிமையாளர் பாலமுருகன், துாத்துக்குடியை சேர்ந்த வியாபாரி மணிகண்டன் இருவரையும் சேத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.
லாட்டரி விற்றவர்கள் கைது
ராஜபாளையம்: ராஜபாளையம் கூரை பிள்ளையார் கோயில் தெருவில் பாண்டியராஜ் 45, வெள்ளைத் தாளில் எழுதப்பட்ட லாட்டரி எண்கள் மதிப்பு ரூ. 4590. விற்ற பணம் 9 ஆயிரம், அலைபேசியை பறிமுதல் அவரை கைது செய்து வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
* ராஜபாளையம் டி.பி மில்ஸ் ரோட்டில் ரயில்வே ஸ்டேஷன் அருகே சிவகிரி தாலுகா தேவிப்பட்டினம் கணேசன் 48, கேரள மாநில லாட்டரி விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்து கைது செய்தனர்.