ராமநாதபுரம்-ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று அங்ககச் சான்றுத் துறை, கமுதி வேளாண் துறை சார்பில் தரமான விதைகள் உற்பத்தி, சிறுதானியங்கள் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் நடந்த பயிற்சி முகாமில் ராமநாதபுரம் விதைச்சான்று, அங்கக சான்று உதவி இயக்குனர் சிவகாமி பேசுகையில், பாரம்பரிய தானியங்களான கேழ்வரகு, வரகு, பனிவரகு, சாமை, தினை ஆகியவற்றை உணவாக பயன்படுத்த வேண்டும்.
தற்போது இவை ஒரு சில பகுதிகளில் மட்டும்சாகுபடி செய்யப்படும் பயிர்களாக மாறிவிட்டது.
எனவே அதிக அளவில் தானியங்களை பயிரிடவும், விதைப்பண்ணைகள் அமைக்கவும் வேண்டும், என்றார்.
தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கி, விதை உற்பத்தி ஆய்விற்கு மண், தண்ணீர் மாதிரிகளை விவசாயிகளிடம் சேகரித்தனர். கமுதி உதவி விதை அலுவலர் சரவணன், வேளாண் உதவி இயக்குனர் சிவராணி, அலுவலர் வீரபாண்டி பங்கேற்றனர்.