ராமநாதபுரம்-வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித பணிவாய்ப்பும் கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி, பத்தாம் வகுப்பில் தோல்விக்கு ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300, பிளஸ் 2 தேர்ச்சிக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 உதவிதொகையாக மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
வேலை வாய்ப்பு அலுவலக்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாக காத்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், மற்றவர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் உதவி தொகை கல்வித்தகுதிக்கு ஏற்ப ரூ.600 முதல் ரூ.1000 வரை வழங்கப்படும். www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம்செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்குஅனைத்து சான்றுகளுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரை தடை ஏற்படாது, என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் தெரிவித்துள்ளார்.