50 பேருக்கு கிராம உதவியாளர் வேலை கிடைச்சாச்சு!

Added : ஜன 12, 2023 | |
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், கிராம உதவியாளர் பணியிடத்துக்காக கடந்த டிசம்பர் 4ம் தேதி நடந்த எழுத்துத்தேர்வில், 3,596 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு, கடந்த 4ம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்பட்டது.கல்வித்தகுதி, வாகனம் ஓட்டும் திறன், படித்தல் மற்றும் எழுத்துத்திறன், பிறப்பிடம், நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில், கிராம உதவியாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.உடுமலை



திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், கிராம உதவியாளர் பணியிடத்துக்காக கடந்த டிசம்பர் 4ம் தேதி நடந்த எழுத்துத்தேர்வில், 3,596 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு, கடந்த 4ம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்பட்டது.

கல்வித்தகுதி, வாகனம் ஓட்டும் திறன், படித்தல் மற்றும் எழுத்துத்திறன், பிறப்பிடம், நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில், கிராம உதவியாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உடுமலை தாலுகாவில், 9; திருப்பூர் வடக்கு - 2, திருப்பூர் தெற்கு - 6, அவிநாசி - 6, பல்லடம் - 8, காங்கயம் - 7, மடத்துக்குளம் - 2, ஊத்துக்குளி - 4, தாராபுரம் - 6 பேர் என, ஒன்பது தாலுகாக்களில், மொத்தம் 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கிராம உதவியாளர் பணியிடம் வழங்கியும், காலி பணியிடங்களில் பணி அமர்த்தியும், அந்தந்த தாசில்தார்கள் உத்தரவிட்டுள்ளனர்.


நிபந்தனை என்னென்ன?



பணி நியமனம் செய்யப்பட்ட கிராம உதவியாளர்கள், உடனடியாக நியமனம் செய்யப்பட்ட பணியிடங்களில் இணைய வேண்டும். பணி நியமனம் குறித்த எவ்வித கோரிக்கைகளும், மேல்முறையீடுகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இந்த பணி தற்காலிகமானது. இப்பணியிடத்திற்கு சிறப்பு காலமுறை ஊதிய விகிதமான (நிலை - 6), 11,100 முதல் 35,100 என்கிற ஊதிய விகிதத்தில், ஊதியம் மற்றும் இதர படிகள் வழங்கப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X