கோவை : மாவட்ட அளவிலான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், பி.எஸ்.ஜி., டெக் கிரிக்கெட் கிளப் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'காசா கிராண்ட்' கோப்பைக்கான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'சி' மைதானத்தில் நடந்தது. இதில், பி.எஸ்.ஜி., டெக் கிரிக்கெட் கிளப் மற்றும் ஜி கிரிக்கெட் கிளப் அணிகள் போட்டியிட்டன.
முதலில் பேட்டிங் செய்த ஜி.சி.சி., அணி, 34 ஓவர்களில் 114 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அணியின் கணேஷ் ராஜா மட்டும் பொறுப்பாக விளையாடி, 36 ரன் சேர்த்தார்.
பி.எஸ்.ஜி., அணியின் வெங்கடேஷ் சிறப்பாக விளையாடி, ஐந்து விக்கெட் மற்றும் இனியன் மூன்று விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து விளையாடிய பி.எஸ்.ஜி., அணி வீரர்கள் நிதானமாக விளையாடி, 44 ஓவர்களில் நான்கு விக்கெட் மட்டும் இழந்து, 115 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். அணியின் கவுசிக் 30 ரன் எடுத்தார்.