அவிநாசி, : அவிநாசி ஒன்றியம், கானுார்புதுாரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 275 பயணிகளுக்கு, 28.68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வினீத் வழங்கினார்.
முதியோர், விதவை, ஆதரவற்றோர், கணவரால் கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு உதவித் தொகை, பட்டா, சிட்டா, தோட்டக்கலைத் துறையின் சார்பில் பண்ணை திட்டம் அமைத்தல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் 28.68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 275 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இதில், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், தாசில்தார் ராஜேஷ், கானுார்புதுார் ஊராட்சி தலைவர் மயில்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.