உடுமலை : விவசாயிகள் போராட்டம் அறிவித்ததால், கோட்டாட்சியர் அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மடத்துக்குளம் பகுதியில், அரசு அனுமதியின்றி செயல்பட்டு எம்.சாண்டு நிறுவனம், காற்று, நீர் பாதித்து வருகிறது. 450 ஏக்கர் விவசாய நிலங்கள், கிராமம் பாதித்து வருகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளுக்கு மீறி செயல்படும், கல்குவாரி, கிரசர் மற்றும் எம்-சாண்ட் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியகோட்டை ஊராட்சி ஆவல்குட்டை, 350 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நேரடி பாசனமும், சுற்றுப்புறத்திலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது.
நீர்நிலை புறம்போக்கு, வண்டிப்பாதை ஆகியவற் றை வகை மாற்றம் செய்யக்கூடாது என்ற அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறி, கிராம உதவியாளர் மற்றும் பலருக்கு, 4.92 ஏக்கர் குட்டை பட்டா மாற்றம் செய்து, அழிக்கப்பட்டுள்ளது.
குட்டையை மீட்க வேண்டும். மடத்துக்குளம், அமராவதி பிரதான கால்வாயை சேதப்படுத்தி, பல லோடு மண் திருடியவர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளபாளையம் கிராமத்தில், முறையான அனுமதியின்றி செயல்படும் அட்டை தயாரிப்பு ஆலையால், மாசு ஏற்படுகிறது.
ஆலையை மூட வேண்டும், என விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நேற்று, கோட்டாட்சியர் அலுவலகத்தில், காத்திருப்பு போராட்டம் அறிவித்திருந்தது. நேற்று காலை போலீசார் அதிகளவு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன்முருகசாமி, சிவக்குமார், முத்து விஸ்வநாதன், சண்முகம், ஜெகன்நாத மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், பேச்சுவார்த்தையை தொடர்ந்து, குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்றனர். கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement