ராமநாதபுரம்-ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர் குறைகேட்பு கூட்டம் நடத்தக் கோரி மீனவ பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இதையடுத்து ஜன. 20 மதியம் 3:30 மணிக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடக்கிறது. அனைத்து மீனவர்களும் பங்கேற்று தங்களது குறைகள், புகார்களை மனுக்களாக தெரிவிக்கலாம்.