ராமநாதபுரம்-ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வித்துறை அதிகாரிகள், தலைமையாசியர் அடங்கிய குழுவினர் கேரள மாதிரி பள்ளிகளுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மாவட்ட அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, தரமான கல்வி வழங்குவதை உறுதிப்படுத்த மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை சார்பில்உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் 3 நாட்கள் கேரளாவில் உள்ள மாதிரி பள்ளிகளை பார்வையிட உள்ளனர்.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கேரளா சுற்றுப்பயணத்தை துவக்கி வைத்தார். முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து முன்னிலை வகித்தார். முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கணேச பாண்டியன், தலைமையாசிரியர்கள் ரவி, கோபால முத்து, யுனைசி இடம்பெற்றுள்ளனர்.
ஜன.11 முதல் 13 வரை மூன்று நாட்கள் கேரளாவில் உள்ள மாதிரி பள்ளிகளை பார்வையிட்டு அங்கு முதல்வர்கள், தலைமையாசிரியர்களுடன் கற்பித்தல், வகுப்பறையில் உள்ள வசதிகள் குறித்து கலந்துரையாட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.