பெ.நா.பாளையம், : வை சரவணம்பட்டி காளப்பட்டி பிரிவில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இன்று காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை கறவை மாடு வளர்ப்பு பயிற்சி வகுப்பு நடக்கிறது.
வரும், 19ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி வகுப்பு காலை முதல் மாலை வரை நடக்கிறது. ஆர்வமுள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயிற்சியில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.