வீணாகும் தண்ணீர்திருப்பூர், 15 வேலம்பாளையம் பள்ளி எதிரில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- சுதர்சனம் பெரியசாமி, 15 வேலம்பாளையம். (படம் உண்டு)
கொசுத்தொல்லைதிருப்பூர் மங்கலம் ரோடு, குள்ளேகவுண்டன்புதுார், விநாயகா கார்டனில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியுள்ளது. கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது.- அகிலா, விநாயகா கார்டன். (படம் உண்டு)
காத்திருக்கும் ஆபத்துதிருப்பூர், 60வது வார்டு, பரமசிவன் நகரில் ஐந்து மாதங்களாக தெருவிளக்கு எரிவதில்லை. 'சுவிட்ச் பாக்ஸ்' திறந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. சரி செய்ய வேண்டும்.- சபரிராஜன், பரமசிவன் நகர். (படம் உண்டு)
தடை வருமா...
கணக்கம்பாளையம் ஊராட்சி, குடியிருப்பு பகுதி, ரிசர்வ் சைட்டில் குப்பை கொட்டப்படுகிறது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. பொது இடத்தில் குப்பை கொட்ட தடைவிதிக்க வேண்டும்.-குமார், பெருமாநல்லுார். (படம் உண்டு)'பேரிகார்டு' அகலுமா?
திருமுருகன்பூண்டி ரிங் ரோடு, நெசவாளர் காலனி பகுதியில் ரோட்டோரத்தில் இடையூறாக உள்ள 'பேரிகார்டு'களை அகற்ற வேண்டும். நடுரோட்டில் உள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.-மனோகரன், நெசவாளர் காலனி. (படம் உண்டு)
ரோடு படுமோசம்மங்கலம் ரோடு, கருவம்பாளையம் பஸ் ஸ்டாப் வளைவில் ரோடு சேதமாகியுள்ளது. குண்டும் குழியுமாக இருப்பதால், வாகனஓட்டிகள் தடுமாறுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.-கோபிநாத், கருவம்பாளையம். (படம் உண்டு)
-------------------------------
ரியாக் ஷன்ரோடு போட்டாச்சு!பல்லடம் அரசு மருத்துவமனை முன்புறம் ரோடு சேதமாகியிருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், தார் ரோடு போட்டு விட்டனர். -எபிநேசர், பல்லடம் ரோடு. (படம் உண்டு)
குப்பை அள்ளிட்டாங்கஅங்கேரிபாளையம் ரோடு அண்ணா காலனியில் குப்பை அள்ளப்படாமல் இருந்தது குறித்து செய்தி வெளியானது. மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி விட்டனர். 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி.-முருகநாதன், அண்ணா காலனி. (படம் உண்டு)
சுத்தமானது கால்வாய்திருப்பூர், 22வது வார்டு, பி.என்., ரோடு, காலனி பஸ் ஸ்டாப்பில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியது; 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், கால்வாய் சுத்தம் செய்யப்பட்டு, மண் அள்ளப்பட்டு விட்டது. -வெற்றிவேல், காலனி ஸ்டாப். (படம் உண்டு)