கோவை, : பிசியோதெரபி கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், கே.ஜி., மற்றும் நந்தா கல்லுாரி அணிகள் முதலிடத்தை பிடித்தன.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, பிசியோதெரபி கல்லூரிகளுக்கான தடகளம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள், கோவை பி.பி.ஜி., பிசியோதெரபி கல்லூரி சார்பில் நடந்தது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பிசியோதெரபி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், 75 புள்ளிகளுடன் கே.ஜி., பிசியோதெரபி கல்லுாரி மற்றும் ஈரோடு நந்தா பிசியோதெரபி கல்லுாரி அணிகள், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றன.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பி.பி.ஜி., கல்வி குழும சேர்மன் தங்கவேலு, அறங்காவலர் அக்சய், முதல்வர் சிவகுமார் மற்றும் உடற்கல்வி இயக்குனர் மனோகரன் பரிசுகளை வழங்கினர்.