சிவகங்கை--சிவகங்கை சாம்பவிகா மேல்நிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா பள்ளி செயலர் ஏ.எம்., சேகர் தலைமையில் நடந்தது. மாணவர்களுக்கு பொங்கலின் அவசியம் குறித்து விளக்கம் அளித்தனர். தலைமை ஆசிரியர் முத்துக்குமார், உதவி தலைமை ஆசிரியர் தியாகராஜன், உடற்கல்வி ஆசிரியர் சரவணன், பொறுப்பாசிரியர் சுப்பிரமணியன், சக்திவேல், முத்துமுருகன் பங்கேற்றனர்.
* இடையமேலுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாக்கியலட்சுமி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் லட்சுமி வரவேற்றார். பெற்றோர்களுக்கு கோலப்போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர்.
ஆசிரியர்கள் சகாய புஷ்பராணி, அமுதா, கோமதி மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டத்தினர் பங்கேற்றனர்.
* சாக்கோட்டை தெற்கு ஒன்றியம் சார்பில் நம்ம ஊர் பொங்கல் விழா சங்கராபுரத்தில் நடந்தது. ஒன்றியத் தலைவர் ராமலிங்கம் தலைமையேற்றார். மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன் பேசினார். மாநில இளைஞரணி துணைத் தலைவர் பாண்டித்துரை மாநில செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் கலந்து கொண்டனர். ஒன்றிய நிர்வாகிகள் கோவிந்தன் மீனாட்சி சுந்தரம் மகேஸ்வரன் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பொதுச் செயலாளர் நளன் நன்றி கூறினார்.
காரைக்குடி முத்துப்பட்டிணத்தில் உள்ள சரஸ்வதி ஆரம்பப் பள்ளியில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியை மீனாள்,வார்டு கவுன்சிலர் ராதா மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
* திருப்புவனம் புதூர் அரசு ஊராட்சி ஒன்றிய தெற்கு நடுநிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் கலந்து கொண்டார். தலைமையாசிரியை அமுதா வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் பிரான்சிஸ் ஜஸ்டீன், லதாதேவி பங்கேற்றனர். மாணவ, மாணவியர்களிடையே கோலப்போட்டி, சிலம்ப போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டன.