காரைக்குடி--காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்து சமய அறநிலையத்துறை சிவகங்கை இணை ஆணையர் மண்டலம் சார்பில் காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில், மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மற்றும் காரைக்குடி குழு கோயில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், காரைக்குடி, தொண்டி, கண்டுப்பட்டி உட்பட 40 கோயில்களை சேர்ந்த 45 பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. காரைக்குடி நகராட்சி சேர்மன் முத்துத்துரை புத்தாடைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் செயல்அலுவலர் மகேந்திர பூபதி, கணக்கர் அழகு பாண்டி, மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் சித்திக், கார்த்தி, கண்ணன், நாகராஜ், ராதா, கலா உள்ளிட்ட பல கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.