பொள்ளாச்சி, : நட்சத்திர திருவிழாவை முன்னிட்டு, பொள்ளாச்சி பி.கே.டி., பள்ளியில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கோவை அஸ்ட்ரோ கிளப் சார்பில், நட்சத்திர திருவிழா, பொள்ளாச்சி பி.கே.டி., பள்ளியில் நடந்தது. இதில், மாணவர்களுக்கு வானியல் சார்ந்த செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது. அஸ்ட்ரோ கிளப் செயலாளர் சாய்லட்சுமி மற்றும் பலர் பங்கேற்றனர்.
கிளப் நிர்வாகிகள் கூறியதாவது:
கி.பி., 1610ம் ஆண்டு, ஜன., 7ம் தேதி வானியல் அறிஞர் கலிலியோ கலிலீ உருவாக்கிய தொலைநோக்கி கொண்டு, வியாழன் கோளின் நிலவுகளை கண்டறிந்தார். இதை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை விஞ்ஞான் பிரசார், அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பள்ளி பாதுகாப்பு இயக்கம் ஆகியவற்றுடன், தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டியுடன் இணைந்து நடத்தியது.
கோவை மாவட்டத்தில் இந்த நிகழ்வு மொத்தம், 20 மையங்களில் நடத்தப்பட்டது. வானியல் சார்ந்த செயல்பாடுகள் குறித்து மாணவர்களிடம் விளக்கப்பட்டது. 'டெலஸ்கோப்' வாயிலாக இரவு வானில் உள்ள நிலவு, கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றை மாணவர்கள் கண்டு மகிழ்ந்தனர். வானியல் நிகழ்வு குறித்து, பாடப்புத்தகத்தில் உள்ள தகவல்களை, 'டெலஸ்கோப்' வாயிலாக பார்த்ததில், மாணவர்களுக்கு புது அனுபவம் கொடுத்தது.
இவ்வாறு, தெரிவித்தனர்.