கோயில்
பாவை பாடல், பக்தி பாடல், கூட்டு வழிபாடு: பாவை இசைப்பள்ளி, மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: விசாலாட்சி, ஏற்பாடு: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, மாலை 6:00 மணி.
திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, காலை 6:30 மணி முதல்.
ஹரி பக்த சமாஜ் குழுவினரின் நாம சங்கீர்த்தனம், அதிகாலை 5:30 மணி, பொங்கல் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி, மாலை 6:30 மணி, வழங்குபவர்: ராமானந்த சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சக்ர ராஜேஸ்வரி பீடம், காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை.
முனியாண்டி சுவாமிக்கு அபிஷேகம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, விளாங்குடி, காலை 9:00 மணி.
தனுர் மாத பூஜை: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை மற்றும் அம்மன் சன்னதி, மதுரை, ஏற்பாடு: ஜகத்குரு சங்காராச்சாரியார் மகாசமஸ்தானம், சிருங்கேரி சாரதா பீடம், காலை 6:00 மணி.
மகா பெரியவா விக்ரகம், வெள்ளி பாதுகைக்கு குருவார பூஜை, சிறப்பு புஷ்பாஞ்சலி: மகாபெரியவா கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நெல்லை பாலு, மாலை 5:30
பக்தி சொற்பொழிவு
மார்கழி மாத சொற்பொழிவு: நிகழ்த்துபவர்- திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமி, விஸ்வாஸ் கருத்தரங்கு கூடம், ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: விஸ்வாஸ் கலை பண்பாடு அறக்கட்டளை, மாலை 6:30 மணி.
மாண்டுக்ய உபநிஷத்: நிகழ்த்துபவர்- கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
திருவாசகம்: நிகழ்த்துபவர்-வெங்கடாசலம், மதுரை திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
பள்ளி கல்லுாரி
கம்பராமாயணம் சொற்பொழிவு: மதுரைக் கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி துணைத்தலைவர் சங்கரசீதாராமன், முன்னிலை: செயலாளர் நடனகோபால், சிறப்பு விருந்தினர்: மதுரை கம்பன் கழக நிறுவனர் பேராசிரியர் சாலமன் பாப்பையா, ஏற்பாடு: மதுரை கம்பன் கழகம், காலை 10:30 மணி.
உடல் காப்பது குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான்: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், துவக்கி வைப்பவர்: சுயநிதிபிரிவு இயக்குநர் பாலகிருஷ்ணன், ஏற்பாடு: உடற்கல்வித்துறை, காலை 6:00
மாணவர்களுக்கான திருக்குறள் திருவிழா: திரு.வி.க., அரசு மேல்நிலைப்பள்ளி, தத்தனேரி, மதுரை, தலைமை: அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன், ஏற்பாடு: வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை, காலை 9:30 மணி.
விவேகானந்தர் 161 வது பிறந்தநாளை முன்னிட்டு கருத்தரங்கு: மதுரைக்கல்லுாரி மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: வழக்கறிஞர் பார்த்தசாரதி, முன்னிலை: தலைமையாசிரியர் ரவி, சிறப்பு விருந்தினர்கள்: காந்தி பொட்டல் பொறுப்பாளர் சாமிக்காளை, ஜே.சி.ஐ. மதுரை சென்ட்ரல் தலைவர் மனோஜ், முத்துாட் பைனான்ஸ் மண்டலத் தலைவர் ராஜ்குமார், பங்கேற்பு: ஜே.சி.ஐ. பட்டயத்தலைவர் ரத்தீஸ்பாபு,காந்தியக்கல்வி முதல்வர் தேவதாஸ், காலை 8:30
தேசிய இளைஞர் தின கருத்தரங்கு: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் கண்ணன், சிறப்பு விருந்தினர்: தேசிய வலிமை நேதாஜி சுவாமிநாதன், காலை 11:30 மணி.
வைகை பொங்கல் விழா: வைகை பொறியியல் கல்லுாரி, தெற்குதெரு, மேலுார், தலைமை: தாளாளர் திருச்செந்துாரன், முன்னிலை: முதல்வர் சிவரஞ்சனி, காலை 10:00 மணி.
பொங்கல் விழா: வேளாண்மை கல்லுாரி ஆராய்ச்சி நிலையம், ஒத்தக்கடை, தலைமை: டீன் மகேந்திரன், ஏற்பாடு: அரசு வேளாண்மை பல்கலை, காலை 7:30 மணி.
பல்வேறு இயக்க முறைமை குறித்த கருத்தரங்கு: லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரி, கிடாரிப்பட்டி, சிறப்பு விருந்தினர்: பேராசிரியர் ஆண்டனி மாணிக்கராஜ், ஏற்பாடு: லதா மாதவன் கல்வி குழுமம், காலை 11:00 மணி.
பொது
தமிழிசை: நிகழ்த்துபவர் - அபர்ணா ரமேஷ், ராஜாமுத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி.
மின் குறைதீர்ப்பு முகாம்: உதவி செயற்பொறியாளர் அலுவலகம், கே.புதுார், மதுரை, தலைமை: மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன், காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
நீதிபதி சிவராஜ் பாட்டீலின் பார்வையில் மனித நேயமும், மானிட உரிமைகள் குறித்த கருத்தரங்கு: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: செயலாளர் நந்தாராவ், பங்கேற்பு: வழக்கறிஞர் செல்வகோமதி, பேராசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, விஜயகுமார், ஏற்பாடு: நீதிபதி சிவராஜ் பாட்டீல் அறக்கட்டளை, காலை 10:30 மணி.
தேசிய இளைஞர் தின விழிப்புணர்வு சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - தேசிய வலிமை மாத இதழ் ஆசிரியர் சுவாமிநாதன், சரஸ்வதி நாரா யணன் கல்லுாரி, பெருங்குடி, மதுரை, ஏற்பாடு: இளைஞர் நலத்துறை, காலை 11:30 மணி.
தேசிய இளைஞர் தின பேரணி துவக்கம்: தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: அம்பிகை கல்லுாரி, அண்ணா நகர், மதுரை, துவக்கி வைப்பவர்: திருநங்கை சமூக செயற்பாட்டாளர் ப்ரியா பாபு, ஏற்பாடு: கல்லுாரி என்.எஸ்.எஸ்., பிரிவு, காலை 8:00
கண்காட்சி
கைத்தறி ஆடைகள் கண்காட்சி, தள்ளுபடி விற்பனை: அர்பன் ஸ்பைஸ் கேலரி, கே.கே.நகர், மதுரை, காலை 10:00 மணி முதல்.
காட்டன் பேப் - ஆடை, வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி விற்பனை: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
ராஜஸ்தான் கிராப்ட் மேளா கண்காட்சி, விற்பனை: விஜய் மகால், கே.கே. நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 வரை.
லண்டன் பிரிட்ஜ், துபாய் சிட்டி பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:30 முதல் இரவு 10:30 மணி வரை.
Advertisement